கனிஷ்கா ஆர்கானிக்ஸின் மே 2026 மாதச் செய்தி மடல் – புதிய தயாரிப்புகள், உற்பத்தி விரிவாக்கம் & விவசாயிகள் பயிற்சி
2026 மே மாதம், கனிஷ்கா ஆர்கானிக்ஸ் நிறுவனத்திற்கு பல்வேறு முக்கியமான முன்னேற்றங்கள் நிறைந்த மாதமாக அமைந்தது. தேங்காய் மற்றும் பாக்கு சாகுபடிக்கான புதிய தயாரிப்புகள் அறிமுகம், புதிய உற்பத்தி கூடம் தொடக்கம், விவசாயிகளுக்கான அங்கீகாரம், மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு நேர்காணல் மற்றும் இயற்கை விவசாயம் தொடர்பான இணையவழி பயிற்சிகள் என பல்வேறு செயல்பாடுகள் இந்த மாதத்தில் நடைபெற்றன.

தேன்னை செழிக்க – புதிய Coconut Combo அறிமுகம்
மே 1, 2026 அன்று கனிஷ்கா ஆர்கானிக்ஸ் நிறுவனத்தின் புதிய Coconut Combo தயாரிப்பு வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
தென்னை மரங்களின் ஆரோக்கியமான வளர்ச்சி, சிறந்த காய்ப்பிடிப்பு மற்றும் அதிக மகசூலை நோக்கமாகக் கொண்டு இந்த சிறப்பு தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பு விவசாயிகள் மற்றும் விற்பனையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தேங்காய் சாகுபடியில் சிறந்த விளைச்சலையும் அதிக லாபத்தையும் பெற உதவும் வகையில் Coconut Combo உருவாக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகள் சங்க பேரவையில் விவசாயிகளுக்கு பாராட்டு
மே 5, 2026 அன்று தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை கூட்டம் SSDM கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவில்பட்டியில் நடைபெற்றது.
கனிஷ்கா ஆர்கானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் இயற்கை விவசாயிகள் இதில் பங்கேற்று பரிசுகளைப் பெற்றனர். இயற்கை விவசாயிகளின் பங்களிப்பையும் அவர்களின் முயற்சிகளையும் பாராட்டும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.

Production Plant 2.0 தொடக்கம்
மே 20, 2026 அன்று கனிஷ்கா ஆர்கானிக்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு கூடமான PRODUCTION PLANT 2.0 தென்னங்குடிபாளையத்தில் தொடங்கப்பட்டது.
நிறுவனத்தின் முதன்மை தயாரிப்புகளான மீன் அமிலம், ஆர்கானிக் காம்ப்ளக்ஸ், EM கரைசல், VAM போன்றவற்றின் கூடுதல் தயாரிப்பு தேவையை கருத்தில் கொண்டு இந்த புதிய உற்பத்தி கூடம் தொடங்கப்பட்டுள்ளது.
புதிய உற்பத்தி கூடத்தின் தொடக்க நிகழ்வில் நிறுவனத்தின் குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இது நிறுவனத்தின் உற்பத்தித் திறனை மேலும் விரிவுபடுத்தும் முக்கியமான முன்னேற்றமாக அமைந்துள்ளது.

டீலர்களுக்கான இணையவழி பயிற்சி
மேலும், மே 31, 2026 அன்று கனிஷ்கா ஆர்கானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழில் முனைவோராக விரும்பும் டீலர்களுக்காக சிறப்பு இணையவழி பயிற்சி நடைபெற்றது.
நிறுவனத்தின் CEO திரு. K. கணேசன் அவர்கள் இணையவழியில் கலந்து கொண்டு டீலர்களுடன் கலந்துரையாடினார். இந்த பயிற்சியில் நிறுவனத்துடன் ஏற்கனவே பயணித்துக் கொண்டிருக்கும் டீலர்கள் மற்றும் புதிதாக இணைய விரும்பும் டீலர்கள் என சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னோக்கி…
2026 மே மாதம், புதிய தயாரிப்புகள், உற்பத்தி விரிவாக்கம், விவசாயிகளுக்கான அங்கீகாரம் மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவற்றில் கனிஷ்கா ஆர்கானிக்ஸின் பல்வேறு முயற்சிகளை வெளிப்படுத்தியது.
விவசாயிகளின் தேவைகளை புரிந்து கொண்டு புதிய தயாரிப்புகளை உருவாக்குவதோடு, உற்பத்தித் திறனை விரிவுபடுத்துதல் மற்றும் விவசாயிகளுக்கும் டீலர்களுக்கும் பயிற்சி மற்றும் தகவல்களை வழங்குதல் போன்ற முயற்சிகளையும் கனிஷ்கா ஆர்கானிக்ஸ் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
விவசாயத்துடன் இணைந்து வளர்ந்து, இயற்கை விவசாயத்தின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களிப்போம்.